பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்

Bookmark and Share

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்

ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், அலைகள் ஓய்வதில்லை, கோட்டைமாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் தங்கம், பாசமலர், ஆகிய சின்னத்திரைகளில் புகழ் பெற்றவர் நடிகர் வெள்ளை சுப்பையா (வயது 78). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி.

கடந்த 5 வருடங்களாக கோவை மாவட்டம் மேட்டுபாளையம் சிவன்புரம் திலகர் வீதியில் வசித்து வந்த இவருக்கு, கடந்த 1 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 8.30 மணிக்கு இறந்தார்.

வெள்ளை சுப்பையாவின் மனைவி சாவித்திரி. இவர்களது ஒரே மகள் தனலட்சுமி. இவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் குவைத்தில் உள்ளார்.

வெள்ளை சுப்பையா 300-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இவரது நடிப்பை பாராட்டி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கலைச்செல்வன் என்ற விருதினை வழங்கினார்.

வெள்ளை சுப்பையாவின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
சசிகுமார் படத்துக்கு இந்த கதியா? புலம்பும் தியேட்டர்காரர்கள்!
குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’
சசிகுமாரின் புதிய படம் பலே வெள்ளையத் தேவா
கிடாரியைத் தொடர்ந்து வெள்ளையத் தேவனாக மாறிய சசிகுமார்
தமிழ் முகத்திற்காக ஐரினுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குனர்!
உதயா ராமகிருஷ்ணன் இயக்கும் “வெள்ளை உலகம்”
100 நாளை தொட்டார் வெள்ளக்காரதுரை
50வது நாளை எட்டிப்பிடித்தார் வெள்ளக்காரதுரை
வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions