'வெள்ளிமூங்கா' காமெடி ஹிட் கூட்டணி மீண்டும் இணைகிறது..!

Bookmark and Share

'வெள்ளிமூங்கா' காமெடி ஹிட் கூட்டணி மீண்டும் இணைகிறது..!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'வெள்ளிமூங்கா' படத்தில் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்து மிரட்டினார்கள் பிஜுமேனனும் காமெடி நடிகர் அஜு வர்கீஸும்.

குறிப்பாக நாற்பது வயதாகியும் திருமணமாகாத, அரசியலில் எப்படியாவது முன்னேற துடிக்கின்ற, 22 வயது இளம்பெண்ணை அதுவும் தன் கூட படித்த தோழியின் மகளை காதலிக்கின்ற பிஜுமேனனுக்கு அஜு வர்கீஸ் கொடுக்கும் ஐடியாக்களும், அதை வொர்க் அவுட் பண்ண அவர்கள் எடுக்கும் காமெடி முயற்சிகளும் அந்தப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.

இப்போது இந்த இருவர் கூட்டணியை, தான் இயக்கும் 'ஷேக் ஹேன்ட்' (கை குலுக்குங்க) படம் மூலமாக மீண்டும் இணைக்கிறார் இயக்குனர் இயக்குனர் வி.கே.பிரகாஷ். இதில் பிஜுமேனன் அரபு நாட்டில் வசிப்பவராகவும், அஜு வர்கீஸ் அங்கே வேலை தேடிச்சென்று சிரமப்படும் மலையாளியாகவும் நடிக்க இருக்கிறார்களாம்.

வரும் ஜுலையில் தொடங்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. படத்தில் இரண்டு புதிய கதாநாயகிகளை அறிமுகம் செய்ய இருக்கிறார்களாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions