'111' வது நாள் வெற்றிவிழா கொண்டாடிய வெள்ளிமூங்கா..!

Bookmark and Share

'111' வது நாள் வெற்றிவிழா கொண்டாடிய வெள்ளிமூங்கா..!

கடந்த பிப்-14 காதலர் தினத்தன்று 'வெள்ளிமூங்கா' படத்தின் '111' வது நாள் வெற்றிவிழா கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்கள் படக்குழுவினர்.  நூறாவது நாள் விழா தானே கொண்டாடுவது வழக்கம்..

அதில் கூட மலையாள திரையுலகினர் புதுமை செய்ய பார்க்கிறார்களோ என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான். நினைக்க வேண்டாம். கடந்த செப்டம்பரில் பிஜுமேனன், நிக்கி கல்ராணி நடித்து, ஜிபு ஜேக்கப் இயக்கிய 'வெள்ளிமூங்கா' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அந்தப்படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு பதிலாக '111' வது நாள் விழா கொண்டாடலாம் என யோசித்த பிஜுமேனன், அதற்கான நாளாக காதலர் தினத்தை தேர்ந்தெடுத்தார்.

காரணம் படத்தின் கதைப்படி நாற்பது வயதாகியும் திருமணமாகாத பிரம்மச்சாரி ஒருவர் 22 வயதான இளம்பெண்ணை, அதுவும் தன்னுடன் படித்த தோழியின் மகளை காதலித்து திருமணம் செய்வதுதான் கதை.

இந்தப்படத்தில் பிஜூமேனனின் அம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார் நடிகை கே.பி.ஏ.சி லலிதா.. இந்த விழாவில் பேசிய அவர், “பெற்ற தாயையே வேண்டாம் என சொல்லும் இந்த காலத்தில் நான் தான் அவருக்கு அம்மாவாக நடிக்கவேண்டும் என விடாப்பிடியாக என்னை நடிக்கவைத்த பிஜுமேனனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்” என்று கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions