விளம்பரத்துக்காக ஒன்று சேர்ந்த யூத் கூட்டணி..!

Bookmark and Share

விளம்பரத்துக்காக ஒன்று சேர்ந்த யூத் கூட்டணி..!

மலையாள சினிமாவை பொறுத்தவரை ஒரு கேமராமேன் இயக்குனராக மாறி, ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுத்துவிட்டால் தொடர்ந்து படங்களைத்தான் இயக்குவேன், கேமராவை தூக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டார்கள்..

அடுத்து ஒரு இயக்குனர் அழைத்தால் கேமராவை தூக்கி விடுவார்கள். தமிழிலும் வேல்ராஜ் போன்ற ஒரு சிலர் இருக்கிறார்கள் தான். ஆனால் மலையாளத்தில் இந்த எண்ணிக்கை அதிகம்.

'அன்வர்' படத்தை இயக்கிய அமல் நீரத்தும் அப்படிப்பட்ட ஒரு ஆள் தான். பிரபல இயக்குனர் ஆஷிக் அபு ஒரு விளம்பரப்படம் எடுக்கப்போவதாக சொல்லி அமல் நீரத்தை அழைக்க, உடனே ஒப்புக்கொண்டார்.

ஆஷிக் கேட்டால் மறுக்காமல் சம்மதிக்கும் அவரது ஆஸ்தான நடிகர் பஹத் பாசில் மற்றும் அமல் நீரத் இயக்கிய 'அயூப்பிண்டே புஸ்தகம்' மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயசூர்யா இருவரும் நடிக்க ஓகே சொல்ல, யூ.ஏ.இ எக்சேஞ் நிறுவனத்துக்காக மூன்று விளம்பரங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.  ஆக இது சுய விளம்பரத்துக்காக சேர்ந்த கூட்டணி அல்ல என்பது தெளிவாகியுள்ளது.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
தமிழுக்குப் படையெடுக்கும் மலையாள இயக்குநர்கள்!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!
பஹத் பாசிலை கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions