லட்சுமி மேனனை 'காதலித்த' வேல்ராஜ்...!

Bookmark and Share

லட்சுமி மேனனை 'காதலித்த' வேல்ராஜ்...!

ஒரு திரைப்பட உருவாக்கத்தில் அந்தப் படத்தின் கதாநாயகிகளுக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இடையே ஒரு புரிதல் இருக்கும். அப்படி இருந்தால்தான் அந்த கதாநாயகிகளை படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தனி கவனத்துடன் தங்களது கேமராவால் படமாக்கி அவர்களை அழகாகக் காட்டுவார்கள்.

பல பேட்டிகளில் படத்தின் நாயகிகள் யாரை வேண்டுமானாலும் குறிப்பிட மறந்து விடுவார்கள், ஆனால் ஒளிப்பதிவாளர்களைப் பற்றி மட்டும் தவறாமல் குறிப்பிட்டுப் பேசுவார்கள்.

'கொம்பன்' படத்தின் நாயகியான லட்சுமி மேனனைப் படத்தில் பார்த்த அனைவருமே அவருடைய அழகைப் பற்றியும், நடிப்பைப் பற்றியும் பாராட்டித் தள்ளுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

படத்தில் லட்சுமி மேனனை, லட்சுமிகரமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக, அவர் அவ்வளவு மெனக் கெட்டாராம். லட்சுமியை லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டார் வேல்ராஜ் என்கிறார்கள்.

இப்படி சொன்னது வேறு யாருமல்ல படத்தின் இயக்குனர் முத்தையாவும், படத்தின் நாயகன் கார்த்தியும்தான் சொன்னார்கள். நேற்று ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்தான் அவர்கள் இப்படிச் சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதைக் கேட்டு வேல்ராஜ் கோபித்துக் கொள்ளாமல் சிரிக்க மட்டுமே செய்தார். 'கொம்பன்' படத்தில் வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது என்று படம் பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான வேல்ராஜ், இப்போது மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions