2017 மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்: விமல் நம்பிக்கை

Bookmark and Share

2017 மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்: விமல் நம்பிக்கை

விமல் நடிப்பில் இந்த வருடம் ‘அஞ்சல’, ‘மாப்ள சிங்கம்’ என இரண்டு படங்களே வெளிவந்திருக்கின்றன. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரெண்டாவது படம்’ முடிவடைந்தும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.இதையடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்து வரும்

‘மன்னர் வகையறா’ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், தனக்கு அடுத்த வருடம் மகிழ்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையும் என்று விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அடுத்து சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.

இந்த படத்துக்கு இமான் இசை அமைக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார்.இதையடுத்து, ‘ராஜதந்திரம்’ இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன்.

இத்துடன் இன்னும் நான்கு முக்கிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. 2017 ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். எனக்கு புதுத் தெம்பை தருவதாக இருக்கும் என்றார்.

 


Post your comment





Related News
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions