தயாரிப்பாளர் மதனை பிடிக்க போலீஸ் தீவிர வேட்டை!

Bookmark and Share

தயாரிப்பாளர் மதனை பிடிக்க போலீஸ் தீவிர வேட்டை!

வேந்தர்மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்த மதன் கடந்த 27–ந்தேதி முதல் மாயமானார்.

வாரணாசி கங்கையில் சமாதி ஆகிறேன் என்று எழுதி வைத்து விட்டு தலைமறைவானார். கடிதத்தில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக பெற்ற பணத்தை கல்லூரியில் கொடுத்து விட்டதாகவும் ‘சீட்’ கொடுத்து விடுவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பாரிவேந்தருடன் தான் பழகுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் விலகி இருந்தார் என்றும் அதனை தொடர்ந்து இந்த முடிவை தான் எடுப்பதாகவும் மதன் கடிதத்தில் எழுதி இருந்தார்.

மதன் திடீரென காணாமல் போனது குறித்து அவரது 2 மனைவிகளும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் மதன் மீது பணமோசடி புகார்களும் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது.

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு இது வரையில் வாங்கி தரவில்லை என்றும் ஒருபுறம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது.

அதில் வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ்.ஆர்.எம் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கல்லூரி சீட் தொடர்பாக அவரிடம் இருந்து பணம் எதுவும் பெறப்படவில்லை. இது தொடர்பான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதனின் பெற்றோர் பாலகிருஷ்ணன்– தங்கம் மற்றும் மனைவி சுமலதா ஆகியோர் மதனை கண்டு பிடித்து தருமாறு முதல்–அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று இதுவரை எந்த தவகலும் கிடைக்காததால் மதனை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர் ட்டில் கோயஸ் கார்பஸ் மனுவை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மதன் மாயமாகி இன்றுடன் 9–நாட்கள் ஆகிறது. அவர் ஓட்டிச்சென்ற கார் சென்னை விமான நிலையத்தில் நின்றது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

அவர் டெல்லி சென்று தங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரித்து வருகின்றனர்.

மதன் டெல்லி மற்றும் ஹரித்துவாரில் எந்த இடத்தில் பதுங்கி இருக்கிறார் என்று ரகசியமாக கண்காணிக்கிறார்கள்.

மேலும் காசியிலும் அவரை தேடி கண்டு பிடிக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

மதன் பயன்படுத்திய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை செல்போன் டவர் மூலம் கண்டு பிடிக்க முடியும்.

மேலும் அவருடைய நெருக்கமான நண்பர்கள் யார்? யார்? அவரது போனுக்கு 27–ந்தேதிக்கு முன்பு வரை வந்த அழைப்புகள் எவை என்பது பற்றிய பட்டியல் பெறப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதன் மாயமான விவகாரத்தில் இது வரை எந்த தகவலும் கிடைக்காததால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions