பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி

Bookmark and Share

பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு, இந்த வழக்கில் மதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.

பின்னர் அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதன், சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருள்முருகன், சிறையில் இருந்து வரும் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். 


Post your comment





Related News
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்
திருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்?
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions