டோலிவுட்டில் மல்டிஸ்டாரர் தான் டிரெண்டா?

Bookmark and Share

டோலிவுட்டில் மல்டிஸ்டாரர் தான் டிரெண்டா?

சமீபகாலமாக டோலிவுட்டில் ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னணி ஹீரோக்கள் நடிப்பது  வாடிக்கையாகி வருகின்றது. மனம் படத்தில் பிரபல அக்கினேனி குடும்பத்தின் மூன்று தலைமுறை பிரபலங்களும் நடித்தனர்.

அதாவது மறைந்த முன்னாள் சிறந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகனும் பிரபல நடிகருமான நாகர்ஜுனும் மற்றும் அவரது மகனும் இளம் ஹீரோவும்மான நாக சைத்தன்யாவும் நடித்தனர்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நந்தமுரி தயாரிப்பாளரும், பிரபல ஹீரோவுமான கல்யாண் ராம், தான் பாலைய்யாவுடனும், ஜூனியர் என் டி ஆருடனும் சேர்ந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் நந்தமுரி குடும்பத்தில் இருந்து முன்னணி ஹீரோக்கள் இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.  அடுத்ததாக டகுபதி குடும்பத்தில் இருந்து முன்னணி ஹீரோக்கள் இணையும் படம் உருவாக உள்ளது.

பிரபல தயாரிப்பாளரான டகுபதி சுரேஷ் பாபு, பிரபல ஹீரோக்களான வெங்கடேஷ், ரானா மற்றும்  நாக சைத்தன்யா ஆகியோரை வைத்து ஒரு படம் பண்ண இருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்திற்கான கதை வேகமாக உருவாகி வருகின்றது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions