வெங்கட்பிரபுவின் முதல் கண்டிசன்!

Bookmark and Share

வெங்கட்பிரபுவின் முதல் கண்டிசன்!

வெங்கட்பிரபு இயக்கும் படங்கள் என்றாலே அதில் மிர்ச்சி சிவா, விஜய் வசந்த், பிரேம்ஜி, வைபவ் என சில நடிகர்கள் கட்டாயம் இருப்பார்கள். ஆனால் அந்த படங்களில் எல்லாம் அவரது தம்பியான பிரேம்ஜி ஹீரோவுக்கு அடுத்தபடியான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.

அதோடு படத்தில் அவரது அலம்பல் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் அவரது பெரியப்பா மகனான யுவன் ஷங்கர் ராஜாவும் கட்டாயம் இருப்பார்.

அதாவது இதுவரை வெங்கட்பிரபு இயக்கியுள்ள சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி தற்போது இயக்கி வரும் மாஸ் ஆகிய படங்கள் வரை யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், சூர்யா நடிக்கும் மாஸ் படத்தை அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். கதையெல்லாம் ஓகேவாகி விட்டது. ஆனால், படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.

ஆனால் அதற்குள், கதை ஓகே என்றதும், அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரேம்ஜி நடிப்பார். இசை யுவன்ஷங்கர்ராஜாதான் என்று தனது கண்டிசனை முன்வைத்து விட்டாராம் வெங்கட்பிரபு.


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions