எதற்கும் ஒரு எல்லை உண்டு : ரசிகர்களுககு வெங்கட்பிரபு எச்சரிக்கை

Bookmark and Share

எதற்கும் ஒரு எல்லை உண்டு : ரசிகர்களுககு வெங்கட்பிரபு எச்சரிக்கை

வெங்கட்பிரபு இயக்கத்தி்ல், சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள மாசு என்கிற மாசிலாமணி படம் குறித்த விமர்சனங்களால் அதிர்ச்சியடைந்துள்ள இயக்குநர் வெங்கட்பிரபு, எதற்கும் ஒரு எல்லை உண்டு  என முரட்டுத்தனமாக எச்சரித்துள்ளார்.

மாசு என்கிற மாசிலாமணி படத்திற்கு இருவகையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்திற்கு விமர்சனம் செய்வது என்ற நிலையிலிருந்து ஒருபடிமேல் சென்று, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், சூர்யா ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் டுவிட்டரில் டிரெண்டிங்களை உருவாக்கி மோதலை உருவாக்கி வருகின்றனர்.

 இதுகுறித்து, இயக்குநர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியம், இதை மகிழ்ச்சியாக பாருங்கள். ஏதாவது குறை இருந்தால், தாராளமாக கூறுங்கள், அதை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.

அதை விடுத்து, ரசிகர்களுக்கிடையே விரும்பத்தகாத வார்த்தைகளை வெளியிட்டு ஒரு கசப்புணர்வை வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை, ரசிகர்கள் தவிர்க்கவேண்டும்.

இதேநிலை தொடருமானால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார். 


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions