'கதை' வைத்து படமெடுக்கும் வெங்கட் பிரபு

Bookmark and Share

'கதை' வைத்து படமெடுக்கும் வெங்கட் பிரபு

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ஜாலிப் படமான 'சென்னை 28' படம் மூலம் விளையாட்டாக படம் இயக்க வந்தவர் வெங்கட் பிரபு. அதன் பின் “சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி” ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா, நயன்தாரா நடிக்கும் 'மாஸ்' படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில்தான் முதன் முறையாக கதை சொல்லியிருக்கிறேன் என வெங்கட் பிரபுவே ஒத்துக் கொண்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

“இதுவரை நான் இயக்கிய படங்கள் காட்சிகளின் தொகுப்பாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது 'மாஸ்' படத்தில் முதன் முறையாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறேன்,” என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன் அவர் கொடுத்த பல பேட்டிகளில் கூட எனது படங்களில் கதை எங்க இருக்கு 'சென்னை 28' படத்திலேயே ஆரம்பித்து விட்டார். மற்றவர்கள் எங்கே கதை என்று கேட்பதற்கு முன்னாலே தாங்களாகவே படத்தில் கதை இல்லை என்று சொல்லிவிட்டால் நல்லது என அவர்கள் நினைத்ததே அதற்குக் காரணம்.

இப்போதுதான் முதல் முறையாக கதை சொல்ல வருகிறார் என்றால் கண்டிப்பாக 'மாஸ்' படம் வெளிவரும் போது படத்தில் கதை இருக்கிறது, என விமர்சிப்பவர்கள் அனைவருமே கண்டிப்பாக அந்தக் கதையைச் சொல்வார்கள்.

படம் வெளிவரும் முதல் காட்சி வரையிலாவது அந்தக் கதை என்ன என்பதை கொஞ்சம் சொல்லாமல் காப்பாற்றிக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் 'அஞ்சாமல்' அனைவரும் சொல்ல ஆரம்பித்து விடுவார்களே...


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions