வெங்கட்பிரபுவின் அடுத்த ப்ளான்!

Bookmark and Share

வெங்கட்பிரபுவின் அடுத்த ப்ளான்!

அஜீத்தின் மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு புதுமுகங்கள் சிலரை வைத்து சரோஜா பாணியில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் வெங்கட்பிரபுவின் ஆசையாக இருந்தது.

ஆனால், அந்த நோக்கத்துடன் தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னபோது யாரும் உடன்படவில்லை. அதனால், அந்த கதையை தள்ளி வைத்து விட்டு கார்த்தியை வைத்து பிரியாணி கிண்டினார்.

ஆனால் பிரியாணி ஊசிப்போய் விட்டது. அதையடுத்து, சூர்யாவை வைத்து ஒரு ஹிட் கொடுத்து மார்க்கெட்டை நிறுத்தி விட வேண்டும் என்றுதான் இப்போது மாஸ் படத்தை இயக்கியிருக்கிறார் அவர்.

ஆனால், இது பேய் படம் என்பதால், அஞ்சான் அளவுக்கு சோடை போகாது. எப்படியும் ஓடிவிடும் என்று எதிர்பார்க்கும் வெங்கட்பிரபு, அடுத்தபடியாக மங்காத்தாவுக்கு பிறகு இயக்குவதற்காக தயார் செய்து பின்னர் கிடப்பில் போட்டிருந்த ஸ்கிரிப்ட்டை தூசு தட்டுகிறாராம்.

அதில் சில புதுமுக நடிகர்களை நடிக்க வைக்கப்போகிறாராம். ஒருவேளை அது செட்டாகவில்லை என்றால், சென்னை 28, சரோஜா படங்களில் நடித்த தனது பழைய டீமை மீண்டும் களமிறக்கவும் ஒரு ஐடியா வைத்திருக்கிறாராம்.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions