சிக்ஸர் அடிக்க தயாராகும் வெங்கட் பிரபு

Bookmark and Share

சிக்ஸர் அடிக்க தயாராகும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யா நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி, ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் பல்கேரியா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.  

தற்போது வரை இந்த டீசர் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் பலர் டீசரை பாராட்டி வருகின்றனர்.

வெங்கட் பிரபு படங்களின் இறுதியில் படத்திற்கான முத்திரையை பதிவு செய்வார். அதன்படி முதல் படமான ‘சென்னை 28’ படத்தில் வெங்கட் பிரபு பிலிம் என்றும், ‘சரோஜா’வில் வெங்கட் பிரபு மூவி, ‘கோவா’வில் வெங்கட் பிரபு ஹாலிடே, ‘மங்காத்தா’வில் வெங்கட் பிரபு கேம், ‘பிரியாணி’யில் வெங்கட் பிரபு டயட் என்றும் கூறியிருந்தார். தற்போது மாஸ் படத்தில் வெங்கட் பிரபு சிக்ஸர் என்று கூறியுள்ளார்.

இப்படம் வெங்கட் பிரபுவின் 6-வது படமாக இருப்பதாலும், படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையிலும் சிக்ஸர் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions