மங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு

Bookmark and Share

மங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா படம் பற்றி ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா உள்ளிடோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் மங்காத்தா.

வெங்கட் பிரபவுக்கும் சரி, அஜீத்துக்கும் சரி இது மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்நிலையில் மங்காத்தா பற்றிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார் வெங்கட்.

மங்காத்தா படத்தின் கதை ஹாலிவுட் படம் ஒன்றில் இருந்து சுடப்பட்டது என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் கதை பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

மங்காத்தா படத்தின் ரகசியம் பற்றி இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. தற்போது கூறுகிறேன். மங்காத்தா எனது சரோஜா படத்தின் உல்டா தான் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சரோஜா படத்தில் சம்பத் எப்படி படம் துவங்கியதில் இருந்து வில்லனாக இருப்பாரோ அதே போன்று தான் மங்காத்தாவில் அஜீத். ஜெயராமின் கதாபாத்திரம் தான் அர்ஜுனுடையது. முதலில் நல்லவராக வந்து பின் வில்லனாக மாறுவது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான சென்னை 28ன் இரண்டாம் பாகம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் வெற்றி பெற பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
காதல் தோல்வியால் விஷம் குடித்த நடிகர்! பின்னணியில் துணை நடிகை
வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்! திரைப்படம் இல்லையா?
மங்காத்தா அஜித் போல வெங்கட் பிரபுவுக்கு ஒரு ரோல்
வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?
மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்
Welcome to tamil cinema - இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?
இயக்குனர் வித்தியாசமான கெட்டப் சொன்னதால் அஜித் போல் வேடம் அணிய விரும்பினேன்- பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை 28 படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம்?
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
தற்கொலை செய்வேன் என மிரட்டி என் மனைவி என்னை நடிக்கவிடாமல் தடுத்தார் - போஸ்வெங்கட் ஓபன்டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions