வெங்கட் பிரபு படத்தில் முரளி விஜய், அஸ்வின்?

Bookmark and Share

 வெங்கட் பிரபு படத்தில் முரளி விஜய், அஸ்வின்?

வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் முதல் பாகத்தில் இடம் பெற்ற ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் வைபவ், மகத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட் படம் என்பதால் தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய்யும், அஸ்வினும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக ஏதாவது ஒரு காட்சியில் அல்லது ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முரளி விஜய்யும், அஸ்வினும் விளையாடி வருவதால், இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள், ஐ.பி.எல் முடிந்த பிறகு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் வெங்கட் பிரபு தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions