பிரேம்ஜியை உங்களுக்கு பிடிக்காதா? மாஸ் பாருங்க கண்டிப்பா பிடிக்கும்: வெங்கட் பிரபு நம்பிக்கை

Bookmark and Share

பிரேம்ஜியை உங்களுக்கு பிடிக்காதா? மாஸ் பாருங்க கண்டிப்பா பிடிக்கும்: வெங்கட் பிரபு நம்பிக்கை

வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான ‘சென்னை 600028’ படம் முதல் கடைசியாக வெளிவந்த ‘மங்காத்தா’ வரை அவருடைய படங்களில் பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரம் வகித்திருப்பார்.

வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தில்கூட பிரேம்ஜிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. தன்னுடைய தம்பி என்பதாலோ, என்னவோ வெங்கட் பிரபு, பிரேம்ஜிக்கு தன்னுடைய படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கிறார் என்று பரவலாக பேச்சுக்கள் அடிபடுகிறது. 

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, நான் எப்போதும் ஒரு கதையை எழுதும்போது, பிரேம்ஜியை ஒரு சிறிய கதாபாத்திரமாக வைத்துதான் எழுதத் தொடங்குவேன். அந்த கதாபாத்திரத்தை மேலும் மேலும் மெருகேற்ற அது படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்து அமையும். என்னுடைய படங்களில் பிரேம்ஜி நடிக்கவில்லையென்றால், அவர் என்னுடைய படத்துக்கு இசையமைப்பாளராக இருப்பார். நடிக்கிறார் என்றால் யுவன் இசையமைப்பாளராக பணியாற்றுவார்.

நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திடப்படாத ஒப்பந்தத்தின் பேரிலேயே ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றி வருகிறோம். பிரேம்ஜியை பிடிக்காதவர்கள் மாஸ் படத்தை பார்த்தால், அவரை பிடிக்க ஆரம்பிக்கும் என்று பெருமை பொங்க கூறினார்.


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions