மாசு படத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான காட்சிகள் இல்லை: டைரக்டர் வெங்கட்பிரபு

Bookmark and Share

மாசு படத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான காட்சிகள் இல்லை: டைரக்டர் வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. 
படத்தில் ஈழத்தமிழ் பேசுகிறவனா.. ‘உன்னை உதைக்க வேண்டும்’ என்று ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழையும் கொச்சைப்படுத்துவதுபோல் வசனம் உள்ளது என்றும் எனவே வரிச்சலுகை அளிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாடலாசியர் சினேகன் தெரிவித்து இருந்தார்.


இதில் ஈழத்தமிழ் பேசும் சூர்யாவிடம் ‘நீ சிலோனா’ என வில்லன் கேட்பதும் அதற்கு பதிலடியாக ‘தமிழின்டா நான். சொந்த மன்ணை பறி கொடுத்துட்டு தனக்கு ஒரு அடையாளமில்லாம இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிற அவனோட வலி என்னவென்று தெரியுமா உனக்கு’ என சூர்யா பேசுவது போன்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. 


‘மாசு’ படத்தில் ஈழத்தமிழர்கள் கொச்சைப்படுத்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு டைரக்டர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் வசனங்கள் படத்தில் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மலேசியாவில் இந்த படத்துக்கு ஈழத்தமிழர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 


படத்தை பார்த்த ஈழத்தமிழர்கள் யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் முதல்நாள் முதல் காட்சியில் நிறைய ஈழத்தமிழர்கள் தான் படத்தை பார்த்தனர். எங்கும் பிரச்சினை ஏற்படவில்லை. லண்டனில் குடியேறியுள்ள ஈழத்தமிழர்கள் இந்த படத்தில் ஈழத்தமிழ் பேசும் வசனங்களுக்கு உதவி செய்தனர் என்றார்.

 


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions