தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...

Bookmark and Share

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...

டோலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனமான சுரேஷ் ப்ரோடக்ஷன்சை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. அந்த நிறுவனத்திற்கு பிரபல சுரேஷ் பாபு, அவருடைய சகோதரரான விக்டரி வெங்கடேஷ் மற்றும் சிலர் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லாம் மறைந்த பிரபல தயாரிப்பாளரும், வெங்கடேஷின் தந்தையுமான ராமா நாயுடு வந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து மற்றுமொரு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட இருக்கின்றது.

அதாவது வெங்கடேஷ் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். சமீபகாலமாகவே பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து புதிய தயாரிப்பு நிறுவனங்கள் உதயமாவது வாடிக்கையாகி வருகின்றது. பிரின்ஸ் மகேஷ் பாபுவின் குடும்பத்தில் இருந்து பிரபல பத்மாலயா ஸ்டுடியோஸ் நிறுவனம் பலகாலமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் அவர் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் எம் பி ப்ரோடக்ஷன்சை சமீபத்தில் தொடங்கி இருக்கிறார். அடுத்ததாக வெங்கடேஷும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். இதற்க்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கின்றது.


Post your comment





Related News
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
நயன்தாரா மீது புகார் !
ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்
அடுத்தமாதம் வெங்கடேஷின் புதுப்பட அறிவிப்பு!
பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?
குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்
இயக்குநரின் தெனாவெட்டு பதில்..!
ஜில்லா ரீமேக்கில் ரவிதேஜா - வெங்கடேஷ்
பாடல் எழுத கஷ்டப்பட்ட வெங்கடேஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions