வெண்ணிலா கபடி குழு பார்ட் 2வில் அன்னக்கொடி லக்ஷ்மன்

Bookmark and Share

வெண்ணிலா கபடி குழு பார்ட் 2வில் அன்னக்கொடி லக்ஷ்மன்

சுசீந்திரன் இயக்கிய முதல் படமான வெண்ணிலா கபடி குழுவின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதனை சுசீந்திரன் உதவியாளர் சேகர் இயக்க இருக்கிறார்.

வெண்ணிலா கபடி குழுவில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் இதிலும் பணியாற்ற இருக்கிறார்கள். வெண்ணிலா கபடி குழுவில் விஷ்ணு ஹீரோவாக நடித்திருந்தார்.

முதல்பாக கதைப்படி விஷ்ணு இறந்து விடுவதால், இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. விஷ்ணுவின் மரணத்திற்கு பிறகு அவரது இடத்திற்கு வந்து அணிக்கு புதிய கேப்டனாக அன்னக்கொடி படத்தில் ஹீரோவாக அறிமுகமான லக்ஷ்மன் நடிக்கிறார்.

நாயகியாக நந்திதா நடிக்கலாம் என்று தெரிகிறது. பயிற்சியாளர் கேரக்டரில் கிஷோர் நடிக்கிறார். இதில் லக்ஷ்மணனின் தந்தை கேரக்டர் பவர்புல்லாக அமைக்கப்பட்டுள்ளதாம்.  அதில் பசுபதி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
வெண்ணிலா கபடி குழு பார்ட் 2-வில் ஹீரோ யார் தெரியுமா?
விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார் \"ரெண்டாவது படம்\"
இன்று 12 படங்கள் ரிலீஸ்!
அட்டகத்தி தினேஷ் இப்போ ஸ்டைலிஷ் தினேஷ்..!
\'அட்டகத்தி’ நாயகனின் ‘வாராயோ வெண்ணிலாவே’
இந்தியில் ரீமெக்காகும் வெண்ணிலா கபடிக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions