அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிய வெற்றிமாறன்!

Bookmark and Share

அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிய வெற்றிமாறன்!

இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த வெற்றிமாறன் - தனுஷின் வடசென்னை திரைப்படம் இந்த வருட இறுதியில் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது தனுஷ் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தை முடித்தவுடன் எதிர்நீச்சல் துரை செந்தில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். தனுஷுக்காக வெற்றிமாறன் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னரே வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தனுஷ். இந்த இடைப்பட்ட மாதங்களில் ஒரு படத்தை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறாராம் வெற்றிமாறன்.

எழுத்தாளர் கோடா நீலிமா எழுதி "shoes of the Dead” என்ற புத்தகத்தை உரிமையை வாங்கியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த புத்தகத்தைதான் தற்போது திரைப்படமாக எடுக்கவிருக்கிறாராம். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனத்திலேயே இந்த படத்தையும் தயாரித்து இயக்கவிருக்கிறார்.

இப்படம் அரசியலால் எப்படி விவசாயம் அழிகிறது என்பதை சுட்டிக் காட்டுகிற படமாக இது உருவாகவிருக்கிறது.


Post your comment





Related News
வடசென்னை படம் தாமதமாவது ஏன்?: வெற்றிமாறன் விளக்கம்
கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்!
தனுஷ் பட இயக்குனர்களின் புது முடிவு!
வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வட சென்னையில் சமந்தா நீக்கப்பட்டாரா?
இம்மாத இறுதியில் தொடங்கும் வட சென்னை!
வட சென்னை படத்தில் சமந்தா நடிப்பாரா?
வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்!
வெற்றிமாறன் வடசென்னைக்கு முன் ஒரு படம் செய்ய முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions