வெற்றிமாறன் படத்தில் தனுஷூக்கு பதில் சிம்பு.?!

Bookmark and Share

வெற்றிமாறன் படத்தில் தனுஷூக்கு பதில் சிம்பு.?!

பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் வெற்றி மாறன். இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் தான் ஹீரோ. இதில் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் தனுஷ்.

இந்நிலையில் இந்தப்படங்களுக்கு அடுத்துப்படியாக விசாரணை என்ற படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், வட சென்னை என்ற படத்தை சிம்புவை வைத்து இயக்க போவதாக அறிவித்திருந்தார் வெற்றி மாறன். ஆனால் இன்று வரை அந்தபடம் துவங்கப்படவே இல்லை. பல்வேறு காரணங்களால் படத்தை துவக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே சிம்பு நடித்த வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு போன்ற படங்கள் பல பிரச்னைகளால் ரிலீஸாகாமல் இருக்கிறது. இதனால் சிம்புவை வைத்து படங்கள் எடுக்க பலர் தயங்குகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், வட சென்னை படத்தில் சிம்புவுக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. சிம்புவுக்காக சொன்ன கதையில், தனுஷூக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறாராம் வெற்றி மாறன். தனுஷூம் கதையை கேட்டு ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் விரைவில் படம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் சூதாடி என்ற படம் உருவாக இருக்கிறது. அதற்கு முன்பாகவே  வட சென்னை  படத்தை முடித்துவிட்டு பிறகு சூதாடியில் இணைய இருவரும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
வடசென்னை படம் தாமதமாவது ஏன்?: வெற்றிமாறன் விளக்கம்
கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்!
தனுஷ் பட இயக்குனர்களின் புது முடிவு!
வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வட சென்னையில் சமந்தா நீக்கப்பட்டாரா?
இம்மாத இறுதியில் தொடங்கும் வட சென்னை!
வட சென்னை படத்தில் சமந்தா நடிப்பாரா?
வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்!
வெற்றிமாறன் வடசென்னைக்கு முன் ஒரு படம் செய்ய முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions