சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்

Bookmark and Share

சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்

பொல்லாதவன், ஆடுகளம் என்று இரண்டு படங்கள். மூன்றாவதாக ஒரு மணிநேரம் ஓடும், விசாரணை என்ற படம். விசாரணையை முழுநீளப் படம் என்று கூற முடியாது. 

வெற்றிமாறன் விசாரணைக்குப் பிறகு தனுஷ் நடிக்கும், சூதாடி படத்தை இயக்குவார், காடுகளில் அதன் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது, பார்த்திபன் முக்கிய வேடமேற்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

சமீபத்திய தகவல், சூதாடிக்குப் பதில், சூதாடிக்கு முன்பே சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்ட வட சென்னை படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஹீரோ சிம்புவுக்கு பதில் தனுஷ். 

இந்த செய்தி நடைமுறைக்கு வர இப்போதைய கணக்குப்படி பார்த்தால் இன்னும் ஒரு வருடமாவது ஆகும். தனுஷ் தற்போது மாரி படத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதையடுத்து பிரபுசாலமன் இயக்கும் படம். மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் தனுஷ் ஹீரோ என்கிறார்கள். ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராயும் தனுஷின் கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல். 

இதையெல்லாம் முடித்துவிட்டு தனுஷ் ஃப்ரீயாக ஒரு வருடம் பத்தாது. 2016 -இல் வட சென்னை ஆரம்பிக்கப்பட்டால்... நிச்சயம் அது ஆச்சரியம்தான்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions