ஜனவரி 29-ல் வெளியாகும் வெற்றிமாறனின் விசாரணை!

Bookmark and Share

ஜனவரி 29-ல் வெளியாகும் வெற்றிமாறனின் விசாரணை!

எம்.சந்திரகுமார் கதையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கியிருக்கும்  விசாரணை படம் வெளிவருவதற்கு முன்பே உலகப்படவிழாக்களில் கலந்துகொண்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அட்டகத்திதினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தைத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பலரும் பார்த்துவிட்டு வெற்றிமாறனை பாரட்டியதும் நடந்தது. படவிழாக்கள் மற்றும் பிரபலங்கள் பார்த்துப் பாராட்டினாலும் அநத்ப்படத்தை வெளியிடவும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. 

எப்படியும் இவ்வாண்டுக்குள் படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போது படம் 2016 ஜனவரி 29 ஆம் தேதி வெளியாகும் என்று தனுஷ் அறிவித்திருக்கிறார். 

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு 29 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதேதேதியில் சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அரண்மனை2 வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions