வெற்றிவேல் படத்துக்கு சென்சாரில் ‘யூ’ சான்றிதழ்!

Bookmark and Share

வெற்றிவேல் படத்துக்கு சென்சாரில் ‘யூ’ சான்றிதழ்!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெற்றிவேல். இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதைதொடர்ந்து இன்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 8-ம் தேதியும் படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிக்குமாரின் நாடோடிகள், சுந்தர பாண்டியன் படங்களை போல இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions