மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி: சிம்பு நடிப்பதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

Bookmark and Share

மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி: சிம்பு நடிப்பதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. இவர்களும் இருவரும் இணையவிருக்கும் இந்த புதிய படத்திற்கு ‘வடசென்னை’ என பெயரிட்டிருக்கின்றனர். இந்த செய்தியை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இப்போது விஜபி-2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கவிருக்கிறேன். இப்படத்தில் எனக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். பொல்லாதவன் படப்பிடிப்பின்போதே இந்த கதையை வெற்றிமாறன் சொல்லியிருந்தார். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். 2016-ல் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தனுஷ் விஐபி-2 படத்தில் பிசியாக இருப்பதால் சிம்புவை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் அடிபட்டன. 

இந்நிலையில், செப்டம்பர் மாதம் தொடங்கும் படத்துக்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டிருப்பது, இவர் ‘வடசென்னை’ படத்தில் ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.


Post your comment





Related News
வெற்றிமாறன் படத்தில் விஜய்யின் பைரவா பட கனெக்ஷன்
வெற்றிமாறன் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் அடுத்த படத்தலைப்பு
தன் அடுத்தப்பட வதந்தி குறித்து முற்று புள்ளி வைத்த வெற்றிமாறன்
வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்!
வட சென்னை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது – வெற்றிமாறன்!
வெற்றிமாறனின் திரைக்கதைக்கு வசனம் எழுதும் அட்லி
செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் இணைந்த சந்தோஷ் நாராயணன்
படங்களின் வெற்றியில் மீடியாக்களுக்கும் பங்கு உள்ளது! -டைரக்டர் வெற்றி மாறன்
மீண்டும் தனுஷுடன் வெற்றிமாறன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions