சினிமாவில் ஒதுங்க மீண்டும் நிழல் தேடும் 'வெயில்' பிரியங்கா..!

Bookmark and Share

சினிமாவில் ஒதுங்க மீண்டும் நிழல் தேடும் 'வெயில்' பிரியங்கா..!

வெயில் படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என ஒரே பார்வையாலே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. ஆனால் அதன்பிறகு தனது படங்களை சரியாக தேர்ந்தெடுக்காததால் படவாய்ப்புகள் குறைந்தது.

அதனால் தமிழில் இருந்து தனது தாய்மொழியான மலையாளத்திற்கு சென்று நான்கு வருடங்களை ஓட்டினார். திரும்பவும் தமிழுக்கு வந்து 'வானம் பார்த்த சீமையிலே' படத்தில் நடித்தார்.

அது வானம் பார்த்த பூமியாக இன்னும் ரிலீசாகாமல் பெட்டிக்குள் கிடக்கிறது. 20012ல் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் மலையாளத்தில் மட்டும் அங்கொன்று இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார்.

தற்போது ஜெயசூர்யாவுடன் இணைந்து நடித்துவரும் 'கும்பசாரம்' படத்தை, தனக்கு ரீ என்ட்ரி தரும் படமாக மிகவும் எதிர்பார்க்கிறார் ஐஸ்வர்யா.. வழக்கமாக சீரியஸ் கேரக்டராகவே நடித்துவந்த ஐஸ்வர்யா இதில் பப்ளியான ரோலில் நடித்துள்ளாராம்.

திருமணம் செய்துகொண்டதால் தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டதா என கேட்டால், “இன்று சினிமா ரொம்பவே மாறிவிட்டது. நமக்கான கதைகள் இருந்தால் நிச்சயம் நமக்கு வாய்ப்பு கிடைக்கும்“ என்கிறார் அப்பாவித்தனமாக.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions