குற்றமே தண்டனை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

குற்றமே தண்டனை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'காக்கா முட்டை' என்ற முதல் படத்திலேயே தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை குவித்தவர் இயக்குனர் மணிகண்டன். இவருடைய அடுத்த படம் 'குற்றமே தண்டனை'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதாவது டிரைலர் ஜூன் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக, ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை தற்போது வெளியிட்டிருக்கின்றனர்.

இப்படத்தில் விதார்த், பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக அமைந்துள்ள இந்த படம் முதல் படத்தை போலவே பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions