விதார்த்திற்கு திருமணம் - வக்கீல் படிக்கும் பெண்ணை மணக்கிறார்!

Bookmark and Share

விதார்த்திற்கு திருமணம் - வக்கீல் படிக்கும் பெண்ணை மணக்கிறார்!

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விதார்த், பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் அனைவரையம் திரும்பி பார்க்க வைத்தார். முதல் இடம், ஜன்னல் ஓரம், வெண்மேகம், ஆள், காடு போன்ற படங்களில் நடித்து வருபவர், இப்போது உலா மற்றும் விழித்திரு படங்களில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்தப்படியாக காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில், குற்றமும் தண்டனையும் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க விதார்த்தின் சகோதரர்கள் தயாரிக்க இருக்கின்றனர்.

இதுநாள் வரை தனியாளாக இருந்து வந்த விதார்த், இப்போது இல்லற வாழ்வில் இணைய இருக்கிறார். ஆமாம் அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. விதார்த், திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணை மணக்க இருக்கிறார்.

காயத்திரி வக்கீலுக்கு படித்து வருகிறார். இவரது தந்தை சிவானந்தமும் ஒரு வக்கீல். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், பழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. ஜூன் 11ம் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது. சென்னையில் ஜூன் 17ம் தேதி திருமண வரவேற்பு நடக்கிறது.


Post your comment





Related News
என்னை கூண்டில் அடைக்க வேண்டாம் - விதார்த்
பிரபல நடிகர் வித்தார்த்துக்கு குழந்தை பிறந்தது
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
சசிகுமாருடன் மோதும் முன்னணி நடிகர்
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
அஜித்தே போன் செய்து நலம் விசாரிக்கும் அந்த ஒரு நடிகர்- ஸ்பெஷல் தகவல்
பெண்களை கவுரப்படுத்தும் வகையில் `ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவின் புதிய முயற்சி
சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் விழித்திரு திரைப்படம்!
குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions