பெண்களை கவுரப்படுத்தும் வகையில் `ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவின் புதிய முயற்சி

Bookmark and Share

பெண்களை கவுரப்படுத்தும் வகையில் `ஒரு கிடாயின் கருணை மனு' படக்குழுவின் புதிய முயற்சி

ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்'  தயாரிப்பில், 'காக்கா முட்டை' மணிகண்டனின் உதவி இயக்குநர் சுரேஷ் சங்கையா   இயக்கி இருக்கும் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. இப்படத்தில் விதார்த் மற்றும் ரவீனா(டப்பிங் கலைஞர்) முன்னணி  கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளராக ஆர் வி சரண், இசையமைப்பாளராக ரகுராம், படத்தொகுப்பாளராக கே எல் பிரவீன் மற்றும் கலை  இயக்குநராக டி கிராபோர்ட் பணியாற்றி உள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு, 'ஒரு கிடாயின் கருணை மனு'  குழுவினர்,  தங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவிற்காக ஒரு குறும் காணொளியை வெளியிட்டுள்ளனர்.   

ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்?  அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈரோஸ் நிறுவனமும், 'ஒரு கிடாயின் கருணை மனு'  படக்குழுவினரும்  இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம். இதுவரை படத்தில்  கதாநாயகர்களின் பெயர் தான் முதலில்  வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில்  முதலாம் இடத்தில் குறிப்பிட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்னை கூண்டில் அடைக்க வேண்டாம் - விதார்த்
பிரபல நடிகர் வித்தார்த்துக்கு குழந்தை பிறந்தது
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
சசிகுமாருடன் மோதும் முன்னணி நடிகர்
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
அஜித்தே போன் செய்து நலம் விசாரிக்கும் அந்த ஒரு நடிகர்- ஸ்பெஷல் தகவல்
சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் விழித்திரு திரைப்படம்!
குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
குற்றமே தண்டனை வசூல் விவரம் வெளியானது!
விதார்த்திற்கு திருமணம் - வக்கீல் படிக்கும் பெண்ணை மணக்கிறார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions