வித்யா பாலன்தான் "பெனாசிர் பூட்டோவா"... ?

Bookmark and Share

வித்யா பாலன்தான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், அவரது வேடத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டில் சவாலான வேடங்களை தைரியமாக ஏற்று நடிப்பவர் வித்யா பாலன். தனக்கென தனித்தன்மை, நடிப்பு, தைரியம் என இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் சற்றே அதிகம்.

வித்யா பாலன்தான் இந்நிலையில் பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படம் என்றாலே இயக்குநர்களின் முதல் தேர்வு வித்யாபாலன் தான். எனினும் இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், "என்னிடம் பெண் சார்ந்த வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் வருகின்றன.

ஆனால் இப்போதைக்கு எதிலும் நான் ஒப்பந்தமாகவில்லை. வித்யா பாலன்தான் இந்த வருடமே பல படங்கள் முடிக்க வேண்டியுள்ளது. அதையெல்லாம் முடித்துவிட்டுதான் அடுத்த படம் குறித்து முடிவெடுப்பேன்" என கூறியுள்ளார்.

எனினும் பெனாசிர் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்பட்டால் பாகிஸ்தான் வசமிருந்து கண்டிப்பாக இடையூறுகள் உண்டு . அதே போல் பெனாசிர் பூட்டோவின் கொலையின் ரகசியங்கள் கூட வெளியாகும் என்பதால் வித்யா பாலன் தயங்குவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான "தி டர்ட்டி பிக்சர்" படத்தில் நடித்து சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions