குடியரசு தலைவருக்கு புனே மாணவர்களுக்காக கையெழுத்திட்ட வித்யா பாலன்

Bookmark and Share

குடியரசு தலைவருக்கு புனே மாணவர்களுக்காக கையெழுத்திட்ட வித்யா பாலன்

ஆசிய அளவில் புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியின் புதிய தலைவராக பாரதீய ஜனதாவை சேர்ந்தவரும், டி.வி சீரியல் நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது.

உலக அளவில் கொண்டாடப்படும் இந்திய திரைப்பட மேதைகளான ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், க்ரீஷ் கர்னாட், யு.ஆர். அனந்தமூர்த்தி போன்றவர்களே இந்த திரைப்படக் கல்லூரியின் தலைவர்களாக இருந்த நிலையில், பா.ஜ.க வின் தன்னிச்சையான இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்லூரியின் டிப்ளமோ பாட மதிப்பீடுகளில் முறைகேடு குறித்தும் கடந்த 3 மாத காலமாக வகுப்புகளை புறக்கணித்து மாணவ–மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 3 மாத காலத்தில் அரசு தரப்பிடம் மாணவர்கள் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. மாறாக, ஏதோ தீவிரவாதிகளைப் பிடிப்பது போல் நள்ளிரவில், கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த போலீசார், சில மாணவர்களைக் கைது செய்தனர். போலீசாரின் இந்த செயல் பலர் வன்மையாக கண்டித்தனர்.

அண்மையில், மாணவர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மாணவர்கள் சங்கம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலனும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் அஞ்சும் ராஜபலியும் எப்டிஐஐ மாணவர்கள் சார்பாக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தில், குடியரசு தலைவர் இதில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து திரைப்படக் கல்லூரியை விடுவித்து அதை தன்னாட்சி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

வித்யா பாலன், அஞ்சும் ராஜபலி தவிர மேலும் 190 இயக்குனர்களும் மாணவர்களுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.


Post your comment

Related News
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions