கணவரை விவாகரத்து செய்ய முடிவா? வித்யாபாலன் விளக்கம்

Bookmark and Share

கணவரை விவாகரத்து செய்ய முடிவா? வித்யாபாலன் விளக்கம்

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர், வித்யாபாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. குரு, உருமி போன்ற தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். பயங்கரவாதியான கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படம் தமிழில் நயன்தாரா நடித்து ‘அனாமிகா’ என்ற பெயரில் வெளிவந்தது.


வித்யாபாலனுக்கும் தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூருக்கும் 2012-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில், இப்போது புயல் வீசத்தொடங்கி உள்ளதாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதாகவும் இந்தி பட உலகில் தகவல்கள் பரவின. விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.


இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இந்தி நடிகர்-நடிகைகள் பலர் விவாகரத்து செய்து பிரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து வதந்திக்கு வித்யாபாலன் தற்போது விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-


“நானும் எனது கணவரும் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதை பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. நான் சினிமாவில் மும்முரமாக நடித்துக்கொண்டு இருந்தபோது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று சிந்திக்கவே இல்லை. சித்தார்த் ராய் கபூரை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் மீது ஆசை வந்தது.


திருமணத்துக்கு பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மற்ற கணவன் மனைவிபோல் நாங்கள் இல்லை. விருந்து விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வது கிடையாது. மற்றவர்கள் போல் ஜோடியாக நின்று ‘செல்பி’ எடுத்து டுவிட்டரில் போடுவதும் இல்லை. கைகோர்த்துக்கொண்டும் இடுப்பில் கைபோட்டுக்கொண்டும் போவது இல்லை. இதனால்தான் நாங்கள் பிரியப்போகிறோம் என்று கூச்சல் போடுகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை.”
இவ்வாறு வித்யாபாலன் கூறினார். 


Post your comment





Related News
ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி
பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்
என்னை பார்த்து இப்படியா கேள்வி கேட்பது- கோபப்பட்ட நாயகி
பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை
தமிழ் சினிமாவை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், அப்படி என்ன நடந்தது வித்யா பாலனுக்கு?
நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்
திருமணமான நடிகர்களிடம் குழந்தை குறித்து கேளுங்கள்?-வித்யா பாலன் ஆவேசம்
கணவரை பிரிந்துவிட்டதாக வதந்தி பரப்புவதா? வித்யாபாலன் கோபம்
சிறையில் கைதி வித்யாபாலன் – அதிர்ச்சி தரும் புகைப்படம்!
திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions