வித்யாபாலனை கன்னத்தில் அறைந்த நடிகர்..!

Bookmark and Share

வித்யாபாலனை கன்னத்தில் அறைந்த நடிகர்..!

பாலிவுட் நடிகை வித்யாபாலன் பெரும்பாலும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். அவர் நடிக்கும் கேரக்டர்கள் வேண்டுமானால் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர அவர் ரொம்பவே மென்மையான மனம் கொண்டவர்.. அவரை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் படப்பிடிப்பின்போது கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது மோஹித் சூரி என்பவர் இயக்கும் 'ஹமாரி அதூரி கஹானி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜ்குமார் ராவ் மற்றும் இம்ரான் ஹாஸ்மி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

தனது சைக்கோ கணவனிடம் மிகுந்த டார்ச்சரை அனுபவிக்கும் ஒரு பெண்ணை பற்றிய படம் தான் இது. இதில் வித்யாபாலனின் கொடுமைக்கார கணவராக நடிக்கும் ராஜ்குமார் ராவ், படப்பிடிப்பின்போது வித்யாபாலனை கன்னத்தில் அறைய வேண்டிய காட்சியில் நிஜமாகவே அறைந்துவிட்டார்.. அதுவும் ஒன்றல்ல.. மூன்று முறை அறைந்துள்ளார்.

அவரின் இந்த செயலால் படக்குழுவினர் ஸ்தம்பித்து நிற்க, பின்னர்தான் தெரிந்தது வித்யாபாலன், ராஜ்குமார் இருவரும் காட்சி இயல்பாக வரவேண்டும் என்பதற்காக முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு நடித்தார்கள் என்று.. ரியாலிட்டிக்காக என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..!


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions