திருமணமான பெண்களால் எதையும் சாதிக்க முடியும்: நடிகை வித்யாபாலன் பேட்டி

Bookmark and Share

திருமணமான பெண்களால் எதையும் சாதிக்க முடியும்: நடிகை வித்யாபாலன் பேட்டி

நடிகை வித்யாபாலனுக்கு 38 வயது ஆகிறது. 2003-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் சுமிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பட உலகை திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

‘கஹானி’ என்ற படத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கணவனை கொலை செய்யும் பெண்ணாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். 2012-ல் வித்யாபாலனுக்கும் தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வராது. சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அதை பொய்யாக்கும் விதத்தில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு 10-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து விட்டார். இதுகுறித்து வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அது நிறைவேறியது. 13 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். ஆரம்பத்தில் சாதாரண வேடங்களில் வந்தேன். அதன்பிறகு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இந்தியா முழுவதும் அறிமுகமானேன். சில படங்கள் தோல்வி அடைந்தன. அதற்காக துவளவில்லை. தோல்வியை சந்திக்காவிட்டால் வெற்றியின் மகத்துவம் தெரியாது.

நான் திருமணம் செய்து கொண்டதும் சினிமா வாய்ப்புகள் குறைந்து விடும் என்றனர். அது தவறு என்று நிரூபித்து இருக்கிறேன். திருமணம் ஆனதும் கணவன், குழந்தை என்று பெண்கள் ஒதுங்கி விடுகிறார்கள். மாமியாருக்கு டீ போட்டு கொடுப்பது, துணிகளை சலவை செய்வது, சமையல் செய்வதுதான் உலகம் என்று இருக்கிறார்கள்.

சமையல் அறையில் முடங்காமல் அவர்கள் வெளியே வர வேண்டும். திருமணமான பெண்களாலும் சாதிக்க முடியும். அதற்கு நான் உதாரணம். எனது மாமியார் வீட்டில் சினிமாவில் தொடர்ந்து சாதிக்கும்படி என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். கணவரும் உதவியாக இருக்கிறார். 50, 60 வயதுகளிலும் நடித்துக்கொண்டே இருப்பேன்.”

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions