நல்ல கதை உள்ள படங்களை விரும்புகிறேன்-வித்யாபாலன்

Bookmark and Share

நல்ல கதை உள்ள படங்களை விரும்புகிறேன்-வித்யாபாலன்

வித்யா பாலனின் இயல்பான நடிப்பு பாலிவுட்டில் நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் பிரபலங்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதைகளை வித்யாபாலனிடம் கொண்டு சென்றனர். அந்த வகையில் நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அப்படியே நடித்து காண்பித்தார்.

ஆரம்பத்தில் வாழ்க்கை பின்னணி திரைப்படங்களுக்கு ஓகே சொன்ன வித்யா பாலன் தற்போது மறுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் நடிகை சில்க் சுமிதா வேடத்தில் நடித்தேன்.

அதில் இருந்து பிரபலங்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து தயாராகும் படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். 

அதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க அழைத்தனர். இது போல் கர்நாடக சங்கீத பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சும், பாகிஸ்தான் முன்னள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ரா சென் ஆகியோருடைய வேடங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருகின்றன.

இவை தொடர்பான கதைகளை என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால் இந்த படங்களில் நடிக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது.

திரைப்படத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்தான் ஓடும் என்ற நிலை மாறி, சிறிய பட்ஜெட் படங்களும் ஓடுகின்றன. காரணம் ரசிகர்கள் கதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களைதான் தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். 

நல்ல கதையம்சம் உள்ள படங்கள்தான் இனி ஓடும் என்ற நிலை வந்திருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது. எனவே நல்ல கதை உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்' என்றார்.


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions