‘தி டர்டி பிக்சர்’ பட தேசிய விருதை கொடுக்க மாட்டேன்: வித்யா பாலன்

Bookmark and Share

‘தி டர்டி பிக்சர்’ பட தேசிய விருதை கொடுக்க மாட்டேன்: வித்யா பாலன்

நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் புனே எப்.டி.ஐ.ஐ. கல்லூரி மாணவர்கள் விவகாரம் ஆகியவற்றை கண்டித்து திவாகர் பானர்ஜி, ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட 10 சினிமா டைரக்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘‘நடக்கும் சம்பவங்களை கண்டித்து நான் தேசிய விருதை திரும்ப கொடுக்க மாட்டேன்.

இது நாட்டு மக்கள் தான் எனக்கு கொடுத்தார்களே தவிர, அரசு அல்ல’’ என்று கூறினார். மேலும், தன்னுடைய அரசியல் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘‘அரசியலில் சேருவதில் எனக்கு ஆர்வம் இல்லை.

அவ்வாறு சேர்ந்தால் மோசமான தோல்வியை சந்திப்பேன்’’ என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், சமூக காரணங்களுக்காக செயல்படுவது ஒருவரது தனிப்பட்ட முடிவு. குறிப்பிட்ட காரணத்துக்காக போராடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.

நடிகை வித்யா பாலனுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ‘தி டர்டி பிக்சர்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Post your comment





Related News
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions