நல்ல கதை இல்லாத படம் ஓடாது- வித்யாபாலன்!

Bookmark and Share

நல்ல கதை இல்லாத படம் ஓடாது- வித்யாபாலன்!

பாலிவுட் பிரபல நடிகை வித்யாபாலனுக்கு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிகிறது. இது குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் நடிகை சில்க் சுமிதா வேடத்தில் நடித்தேன். 

அதில் இருந்து பிரபலங்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து தயாராகும் படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்துகொண்ண்டிருக்கிறது.

இதே போன்று இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க அழைத்தனர். மேலும் கர்நாடக சங்கீத பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ராசென் ஆகியோருடைய வேடங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன.

ஆனால் இந்த படங்களில் நடிக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது.

திரைப்படத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்தான் ஓடும் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படியல்ல. கதையிருந்தால் சிறிய அளவு முதலீடு செய்து எடுத்த படங்களூம் ஓடுகின்றன. 

எனவே நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் இனி ஓடும் என்ற நிலை வந்துவிட்டது.

கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது’’ என்றார்.


Post your comment





Related News
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எந்திரம் அல்ல: வித்யாபாலன்
என்னை பார்த்து இப்படியா கேள்வி கேட்பது- கோபப்பட்ட நாயகி
தமிழ் சினிமாவை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், அப்படி என்ன நடந்தது வித்யா பாலனுக்கு?
வித்தியாபாலனை பார்த்து பொறாமைபடும் சிங்கள நடிகை
நியூசிலாந்து நிலநடுக்கத்தில் சிக்கினார் நடிகை வித்யாபாலன் !
வித்தியாபாலன் அதுக்கு சரிவராது : நமிதா அதிரடி !
வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் நடிகர்.!
தமிழ் படத்தை தவிர்க்கும் வித்யா பாலன்!
வித்யா பாலனுக்கு ஒத்துக் கொள்ளாத குளியல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions