அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வித்யாசாகர்!

Bookmark and Share

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வித்யாசாகர்!

1989-ல் பூமனம் என்ற படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிய வித்யாசாகர், அதையடுத்து நிலாப்பெண்ணே படத்துக்கு இசையமைத்தவர், பின்னர் தெலுங்குக்கு சென்று விட்டார். பல ஆண்டுகளுக்குப்பிறகு அர்ஜூன் நடித்த ஜெய்ஹிந்த், கர்ணா படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.

அதன்பிறகு பாரதிராஜாவின் பசும்பொன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர் ரஜினி நடித்த சந்திரமுகியில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். கடைசியாக, தமிழில் விமல் நடித்த ஜன்னல் ஓரம் படத்துக்கு இசையமைத்த வித்யாசாகர், தற்போது வடிவேலு நடிக்கும் எலி படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்துக்கு மெலோடி பாடல்களே வேண்டும் என்பதால் லேட்டஸ்ட் இசையமைப்பாளர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்த வடிவேலு, வித்யாசாகரை அழைத்து தன் விருப்பத்திற்கேற்றபடி பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறார்.

இதற்கு முன்பெல்லாம் பாடல்கள் விசயத்தில் தலையிடாமல் இருந்த வடிவேலு, இந்த படத்தைப்பொறுத்தவரை கதை விவாதம் நடந்தபோதே கம்போசிங்கிலும் கலந்து கொண்டு, ஏராளமான டியூன்களை போட வைத்து அதிலிருந்து தனக்கு பிடித்தமான டியூன்களை செலக்ட் பண்ணியிருக்கிறாராம்.

அந்த வகையில், பாடல்கள் ரொம்ப நன்றாக வந்திருக்கிறதாம். அதனால் சமீபகாலமாக மார்க்கெட்டில் சத்தமில்லாமல் இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர், வடிவேலுவின் எலி படம் ஹிட்டானால் மீண்டும் தான் ஒரு ரவுண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions