சந்தானத்துடன் மீண்டும் ஜோடி சேர்ந்த வித்யுலேகா!

Bookmark and Share

சந்தானத்துடன் மீண்டும் ஜோடி சேர்ந்த வித்யுலேகா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதன்பிறகு ஓரிரு படங்களில் அவருடன் நடித்தார்.

அதன்பிறகு சந்தானம் ஹீரோவாகி விட்டதால் அவரை கண்டுகொள்ளவில்லை.ஆனால் தான் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் க்ளைமாக்சில் தனக்கு மனைவியாக நடிக்கும் வேடத்தில் வித்யுலேகாவை நடிக்க வைத்தார்.

காமெடி நடிகை என்றபோதும் அந்த கேரக்டருக்கு ஏற்ப பீல் பண்ணி நடித்து காட்சிக்கே உயிர் கொடுத்திருந்தார் வித்யுலேகா. அதன்காரணமாக தற்போது ஆர்யாவுடன் தான் நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் வித்யுலேகா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இந்த படத்தில் ஆர்யா -தமன்னா ஜோடியைப்போன்று சந்தானம்-வித்யுலேகாவின் கேரக்டரும் பேசப்படும் வகையில் வந்திருக்கிறதாம்.

இதுபற்றி வித்யுலேகா கூறுகையில், இந்த படம் எனக்கு ஒரு லக்காதான் கிடைச்சிருக்கு. ஒரு ஸ்கோப்பான கதாபாத்திரம். ஆர்யா, சந்தானம், தமன்னா என்று நண்பர்களோடு சேர்ந்து நடிச்சிருக்கேன்.

குரூப்பா இந்த படத்துக்கு எபோர்ட் போட்டிருக்கோம். ராஜேஷ் சாரோட எல்லா படங்களிலுமே காமெடி சூப்பரா இருக்கும். இந்த படத்துல இன்னும் ஜாஸ்தியாக கொடுத்திருக்காரு. டப்பிங் பண்ணும்போது நானே விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன். கண்டிப்பாக இந்த படம் 100 சதவிகிதம் ஹிட்தான் என்கிறார்.


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
தனுஷ் அழைத்ததற்காக கதைகூட கேட்காமல் நடித்த பிரபல நடிகை!
அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகை
அஜித் பிரியாணியை சுவைத்த வித்யூராமன்
தல56 ஐ வித்யுலேகா மறந்தது ஏன்?
விஜய், அஜித் படங்களால் சம்பளத்தை உயர்த்திய வித்யூலேகா!
மீண்டும் அஜித்துடன் வித்யூலேகா!
ரசிகர்கள் சிரித்தால் சந்தோஷம் தான்; வித்யூலேகா ராமன்
ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions