விஜய், அஜித் படங்களால் சம்பளத்தை உயர்த்திய வித்யூலேகா!

Bookmark and Share

விஜய், அஜித் படங்களால் சம்பளத்தை உயர்த்திய வித்யூலேகா!

தன்னை மற்றவர்கள் மட்டம் தட்டி பேசுவதையும், கிண்டல், கேலி பண்ணுவதையும், தன்னை பற்றி கேவலமாகப் பேசுவதையும் சகித்துக் கொண்டவர் செந்தில். குறிப்பாக கவுண்டமணி அவரை திட்டுவதையே மக்கள் காமெடி என்று ரசித்தனர். 

இந்த வகையில் தற்போது நடிகை ஆர்த்தி குண்டாக இருப்பதை மற்றவர்கள் கேலி செய்யாத படங்களே இல்லை. அவரை மிஞ்சுகிற அளவுக்கு தன் குண்டு உடம்பினால் கேலி செய்யப்பட்டு வருகிறார் வித்யூலேகா.

சின்னத்திரை மற்றும் சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வரும் மோகன் ராமின் மகளான இவர் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  

அந்தப் படத்தில் இவரது நடிப்பு பேசும் அளவிற்கு இல்லை என்றாலும், இளம் காமெடி நடிகைகள் யாரும் இல்லாததினால், வித்யூவைத் தேடி மளமளவென வாய்ப்புகள் வரத்தொடங்கின.  இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். 

கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான ஜில்லா படத்திலும்,  வீரம் படங்களில் நடித்த இவர், இந்த வருடமம் விஜய்யின் புலி படத்திலும், அஜித்தின் தல 56 படத்திலும் நடித்து வருகிறார். தல 56 படத்தில் அஜித்தின் தங்கையாக லக்ஷ்மிமேனனும், வித்யூலேகா பக்கத்துவீட்டுப் பெண்ணாகவும் நடித்து வருகிறாரார்.

அஜித், விஜய் படங்களை தொடர்ந்து வித்யூலேகாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடங்கியதால் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார்.

 


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions