சிக்கலில் விக்னேஷ்!

Bookmark and Share

சிக்கலில் விக்னேஷ்!

சின்னத்தாய் படத்தில் அறிமுகமான விக்னேஷ், பாரதிராஜாவின் கிழக்கு சீமை யிலே, பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா உள்பட பல மெகா படங்களில் நடித்தவர். என்றபோதும், அவரால் முன்னணி நடிகர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே ஒரு சராசரியான நடிகராகத்தான் இருந்து வருகிறார். ஆனால், ஈசா, கெளரவர்கள், புவனக்காடு படங்களுக்குப்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் அவன் அவள் என்ற பெயரில் ஒரு படத்தை தானே தயாரித்து நடித்தார் விக்னேஷ். ஆனால் அந்த படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை.

அதனால் பல மாதங்களாக காத்திருந்த அவர் கடந்த மாதத்தில் படத்தை தானே ரிலீஸ் பண்ண நினைத்தார்.

ஆனபோதும் படத்தை சொந்தமாக வெளியிட குறைந்தபட்சம் 20 லட்சம் வரை தேவைப்படுகிறதாம். ஆனால் கைவசம் இருந்த பணத்தை வைத்து படத்தை எடுத்து விட்ட விக்னேஷ்க்கு எதிர்பார்த்தபடி பைனான்ஸ் உதவி கிடைக்கவில்லையாம். அதனால் படத்தை வெளியிட முடியாமல் தடுமாறிக்கொண்டு நிற்கிறார் விக்னேஷ்.


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions