உயிருள்ளவரை ஜெயிக்க போராடுவேன்: விக்னேஷ் உருக்கம்

Bookmark and Share

உயிருள்ளவரை ஜெயிக்க போராடுவேன்: விக்னேஷ் உருக்கம்

விக்ரமோடு சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் விக்னேஷ். விக்ரமிற்கு திருப்புமுனை தந்த சேது படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமாகியிருந்தவர்தான் விக்னேஷ். சில காரணங்களால் அது விக்ரமிற்கு செல்ல அவர் வெற்றிபெற, விக்னேஷ் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

கார் உதிரிபாக கடை, சில தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் விக்னேஷ் அதில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் போட்டு தொடர்ந்து ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் தயாரித்து நடித்து வரும் படம் அவன் அவள். அவருக்கு ஜோடியாக தேவிகா மாதவன் நடிக்கிறார்.

ரவி சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார், கார்திக் ராஜா இசை அமைத்துள்ளார், வேலு பிரபாகரனின் உதவியாளர் ராம் கிரீஷ் மிரிளானி இயக்கி உள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா நடிகர் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. கார்த்திக் வெளியிட, விஷால் பெற்றுக் கொண்டார்.விழாவில் விக்னேஷ் உருக்கமாக பேசியதாவது: எந்த ஒரு விஷயத்திலும் ஜெயித்து விட்டால் அதற்கு பிறகு சுவாரஸ்யம் இருக்காது.

ஜெயிக்க போராடுவதுதான் சுவாரஸ்யம், அதனால் நான் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். பல துறைகளில் 60 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். அந்த துறையில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்கிறேன்.

இதுவரை எவ்வளவு இழந்தேன் என்பதை நான் கணக்கு பார்க்கவில்லை. எவ்வளவு பெறுவேன் என்றுதான் பார்ப்பேன். தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தால் வெற்றி நம்மை விட்டு எங்கேயும் போகாது ஒரு நாள் அது நம் கைக்கு வந்தே தீரும்.

என்னை பொறுத்தவரை சினிமா எனக்கு உயிர். வெற்றியோ தோல்வியோ சினிமாவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சாகும்வரையில் சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

எனக்கு என் நண்பர்கள் பக்க பலமாக இருந்த உதவி வருகிறார்கள். இந்த படத்திற்குகூட பெயருக்குதான் நான் தயாரிப்பாளன். நண்பர்கள்தான் பணம் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இந்தப் படம் ஜெயிக்க வேண்டும். இவ்வாறு விக்னேஷ் பேசினார்.


Post your comment

Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions