நயன்தாராவுக்காக மதம் மாறிய விக்னேஷ் சிவன்

Bookmark and Share

நயன்தாராவுக்காக மதம் மாறிய விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவும், ‘நானும் ரவுடிதான்’ பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள் என்று தகவல் வெளியானது. நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு பிஎம்டபிள்யூ காரும், பெசன்ட் நகரில் வீடும் வாங்கிக் கொடுத்தார். மேலும் பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் இதுவரை இருவரும் காதலை உறுதி செய்யவில்லை. இப்போது இருவரும் காதலில் நெருக்கமாகி திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஏற்கனவே, இயக்குனர் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். அதன்பின் அந்த காதல் முறிந்ததும், மீண்டும் தனது தாய் மதத்திற்கே திரும்பினார்.

சமீபத்தில் ரோம் சென்ற நயன்தாரா போப்பிடம் ஆசி பெற்றார். அப்போது நயன்தாராவுடன் சென்றிருந்த விக்னேஷ் சிவன், ரோமிலேயே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

விக்னேஷ் சிவன் தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவனைஎல்லோரும் விக்கி என்று அழைக்கிறார்கள். விக்டர் என்ற பெயரையும் சுருக்கமாக விக்கி என்று அழைக்கலாம்.

எனவே இந்த பெயர் அவருக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும் என்று நயன்தாரா நினைத்ததால் விக்னேஷ் சிவன் இப்போது விக்டர் ஆனார் என்று கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால்தான் இந்த மதமாற்றம் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions