விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா மோதல்?

Bookmark and Share

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா மோதல்?

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாகவும் மலர்ந்தது. விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக சொகுசு கார் ஒன்றை பரிசளித்ததாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் இருவரும் கேரளா சென்றனர். அப்போது அங்குள்ள கிறிஸ்தவ கோவிலில் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவின. இருவரும் இதனை மறுத்தார்கள்.

இந்த நிலையில் தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் செல்பி படம் இணையதளங்களிலும், ‘வாட்ஸ்– அப்’களிலும் பரவியது. இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொரிசீயஸ் தீவுக்கு இருவரும் ரகசியமாக சென்றதாகவும் அங்கு வைத்து இந்த செல்பி படத்தை விக்னேஷ் சிவன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்படத்தை நண்பர்களிடம் அவர் காட்டியபோது ஒருவர் வாட்ஸ் – அப்பில் தனது மொபைலுக்கு அதை அனுப்ப செய்து பிறகு இணையதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது.

செல்பி படத்தை பார்த்ததும் நயன்தாரா அதிர்ச்சியானார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் திட்டமிட்டு வெளியிட்டு விட்டதாக கருதினார். இதையடுத்து அவருடன் பேசுவதை தவிர்த்தார். நானும் ரவுடிதான் படத்தின் பணிகள் இன்னும் பாக்கி இருப்பதால் படக்குழுவினர் அவரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அத்துடன் நயன்தாராவை கேலி செய்வது போன்ற வீடியோ ஒன்று ‘வாட்ஸ் – அப்’ இணைய தளங்களில் தற்போது பரவி வருகிறது. அவரது முந்தைய காதல் சமாச்சாரங்களை வைத்து இதனை உருவாக்கியுள்ளனர்.

நயன்தாராவின் காதல் விளையாட்டுக்களை வடிவேலு கிண்டல் செய்வது போன்று இந்த வீடியோ உள்ளது. சிம்பு, பிரபுதேவா உள்ளிட்ட பல நடிகர்கள் பெயர்கள் இந்த வீடியோ படத்தில் இடம் பெற்றுள்ளது. இதனை பலரும் ஆர்வத்தோடு பார்க்கின்றனர். நண்பர்களுக்கும் ‘வாட்ஸ்–அப்’ களில் அனுப்பி வருகிறார்கள்.


Post your comment





Related News
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions