ஏழை மாணவ–மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி

Bookmark and Share

ஏழை மாணவ–மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி

விஜய் வருடந்தோறும் படிக்க வசதி இல்லாத மாணவ–மாணவிகளை தேர்வு செய்து கல்வி உதவிகள் வழங்கி வருகிறார். 25 ஏழை மாணவ–மாணவிகளை படிக்க வைக்கிறார். அவர்களின் கல்வி கட்டண செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்கிறார். 

அத்துடன் வருடம் தோறும் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மாணவ– மாணவிகளை தேர்வு செய்து நோட்டு புத்தகங்கள் வழங்குகிறார். வழக்கம்போல் இந்த ஆண்டும் 5 லட்சம் ஏழை மாணவ– மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார். 

இந்த நோட்டு புத்தகங்கள் அனைத்தையும் வேன்களில் ஏற்றி அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு இவை விநியோகம் செய்யப்பட உள்ளன. 

விஜய் தற்போது ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தில் நாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புதேவன் இயக்குகிறார். 

‘புலி’ படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுத்து இருப்பதாக ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் தெரிவித்து உள்ளார். சண்டை காட்சிகள் மட்டுமே 84 நாட்கள் படமாக்கியுள்ளார்களாம்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions