வரி ஏய்ப்பில் விஜய், நயந்தாரா மற்றும் சமந்தா

Bookmark and Share

வரி ஏய்ப்பில் விஜய், நயந்தாரா மற்றும் சமந்தா

நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார் நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட பைனான்சியர்  ரமேஷ், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். 

நேற்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்றது. மொத்தத்தில் புலிக்குழுவினர் 25 கோடி ருபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் புலி பட குழுவினர் வீடுகளில் இருந்து மொத்தமாக 2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் விஜய் கடந்த 5 ஆண்டுகளாகவும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட பைனான்சியர்கள் 6 ஆண்டுகளாகவும் மேலும் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions