ரகசியமாக போட்டோசூட் நடத்தும் விஜய்

Bookmark and Share

ரகசியமாக போட்டோசூட் நடத்தும் விஜய்

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள நடிகர் விஜய். பெரியவர்களை விட, குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் இடையே “அண்ணா” என்று தங்கள் வீட்டு பிள்ளை போல அழைக்கப்படும் ஒரே நடிகர்.

சமீப காலமாக இவரது திரைப்படங்கள் அனைத்திலும் அரசியலும், நாட்டு நடப்புகள் பற்றியவையாக வெளியாகி வருகிறது. அதில் “துப்பாக்கி”, “கத்தி” போன்றவை வெற்றி படங்களாக அமைந்தன.

இவரது அப்பாவின் உதவியோடு திரையுலகில் நுழைந்தாலும், நிறைய தடைகளும் தோல்விகளையும் தாண்டி தான் விஜய் வெற்றிப்பெற்றார் என்பது மிகையாகாது. இவர் நடித்த முதல் படமான “நாளைய தீர்ப்பு” படு தோல்வி அடைந்தது. பல தோல்விகளுக்கு பிறகு, “பூவே உனக்காக” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்தார் நடிகர் விஜய்.

சிறு வயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன் விஜய். சூப்பர்ஸ்டார் என்னும் அவரது இடத்தை தமிழகத்தில் யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறுவார்.

“போக்கிரி” படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென ஒரு நாள் விஜய்க்கு கண்களில் அலர்ஜி ஏற்பட்டது. அது வீக்கம் அடைந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தன் பேவரெட் ஹீரோ நடித்த படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்க்க முடியவில்லை என்று தற்கொலை செய்துக் கொண்ட ரசிகர்களின் பட்டியலை எடுத்து பார்த்தல், அதில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தான் இருப்பார்கள். “திருப்பாச்சி” முதல் கடைசியாக வெளிவந்த படம் வரை இந்த பட்டியல் நீள்கிறது.

அந்த அளவிற்கு ரசிகர்கள், இவர் மீது தீராத காதல் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் பிறந்தநாளன்று, அவர் பிறந்த மருத்துவமனைக்கு சென்று அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு வித்யா என ஒரு தங்கை இருந்தார். இவர் சிறு வயதிலேயே நோய் காரணமாக இறந்துவிட்டார். அவர் மீது மிகவும் பாசமாக இருந்தார் விஜய். இன்று, தமிழகத்தில் இவருக்கு லட்சக்கணக்கான தங்கைகள் இருக்கின்றனர்.

கடந்த 1998ஆம் ஆண்டு, தமிழக அரசு இவருக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவித்தது. டாக்டர்.எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. திரைத்துறையில் இவரது பங்களிப்பிற்காக இந்த பட்டம் கொடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் கூறியிருந்தனர்.

இவரது தந்தை இயக்குனர், தாய் கர்நாடக சங்கீத பாடகி, விஜய் நடிகர் என அனைவரும் கலைத் துறையை சேர்ந்தவர்கள். இவர் கெட்டப்பை மாற்றுவதே இல்லை என்று பலரும் கூறுவார்கள். ஆனால், தனக்கு ஏற்ற பல கெட்டப்புகளில் ரகசியமாக போட்டோசூட் எடுத்து வைத்திருக்கிறாராம், நடிகர் விஜய்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions