சிறுவனை தாக்கிய விவகாரம், எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை, மௌனம் ஏன்?

Bookmark and Share

சிறுவனை தாக்கிய விவகாரம், எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை, மௌனம் ஏன்?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகளில் திருவிழா தான்.

இந்நிலையில் இவர்களுடைய ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் திட்டி பேசி கொள்வது சாதரணம் தான்.

தற்போது இந்த சண்டை வீதி வரை வந்துவிட்டது, ஏற்கனவே கத்தி ஸ்பெஷல் ஷோ போட்ட போது அஜித்தை பற்றி தரக்குறையாக ஒருவர் பேசினார்.

பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரே முன்வந்து மன்னிப்பு கேட்டார்.

அதேபோல் தற்போது அஜித் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது, அங்கு ஒரு சிறுவன் விஜய் குறித்து கொஞ்சம் தவறாக பேசினான்.

உடனே ஒரு சில விஜய் ரசிகர்கள் அவனை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர், மேலும் அஜித் ரசிகர்கள் மதுரையில் முதியவரை தாக்கியது, கும்பகோணத்தில் திரையரங்கை உடைத்தது என இவர்களால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், அஜித் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் பல்கேரியாவில் ஷுட்டிங்கில் இருக்கின்றார், விஜய் ரசிகர்களை அழைத்து போட்டோஷுட் நடத்துகின்றார். இதற்கு என்ன தான் தீர்வு? என்பதே நடுநிலை ரசிகர்களின் ஆதங்கம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions