புதிய படத்துக்காக கதை கேட்டுள்ள விஜய்!

Bookmark and Share

புதிய படத்துக்காக கதை கேட்டுள்ள விஜய்!

எத்தனை பெரிய ஸ்டார் நடிகரின் படமாக இருந்தாலும் கதைதான் முதுகெலும்பு. அது நன்றாக இருந்தால்தான் படங்கள் வெற்றி பெறும் என்று ரஜினியே சொன்ன பிறகு மற்ற நடிகர்களை கேட்க வேண்டுமா என்ன? தற்போது புலி படத்தின் இறுதிகட்டத்தை எட்டியுள்ள விஜய், இந்த படத்தை முடித்ததும் ராஜா ராணி அட்லி இயக்கும் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்ட விசயம்.

ஆனால், அதற்கடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் உறுதிபடுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னிடம் கதை சொல்வதற்கு அப்பாய்ண்மென்ட் கேட்டிருக்கும் டைரக்டர்களை ஒவ்வொருவராக அழைத்து கதை கேட்டு வருகிறார் விஜய்.

அப்படி கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 5 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார்களாம். ஆனால், கதையை கேட்ட உடனேயே யாருக்குமே பதில் சொல்லும் பழக்கமில்லாத விஜய், வழக்கம்போல் நீங்க போங்க நான் அப்புறமா கூப்பிடுறேன்  என்று தான் எப்போதும் சொல்லும் பதிலையே அனைவரிடமும் சொல்லியிருக்கிறாராம்.

மேலும், அப்படி தான் கேட்டிருக்கும் 5 கதைகளில் இருந்து ஒன்றைத்தான் அட்லி இயக்கும் படத்தை  அடுத்து  நடிக்கும் படத்துக்கு ஒகே சொல்லப்போகிறாராம் விஜய். அதனால் அந்த 5பேரில் யார் அதிர்ஷ்டசாலி என்பது அட்லி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் அறிவிக்க உள்ளார் விஜய்.

ஆக, கதை சொன்ன ஐந்து பேருமே அடுத்து தளபதி தங்களையே அழைக்க வேண்டும் என்று இஷ்டதெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions